ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ராமேஶ்வரம், தமிழ்நாடு.
இந்தியாவின் முக்கிய சமயம் சார்ந்த ஆன்மீக இடங்களில் ஒன்று ராமேஶ்வரம். "தென் தமிழகத்தின் வாரனாசி" என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில், ராமாயணத்தின் பல சுவடுகள் காணக்கிடைக்கின்றன.. பிரசித்திபெற்ற ராமாநாத ஸ்வாமி திருகோயில் இங்கு அமைந்திருக்கிறது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடம் ராமேஸ்வர கடற்கறைக்கு வலப்பக்கதில் அக்னி தீர்த்தத்தில் ராமநாத ஸ்வாமி திருகோயிலிருந்து சிறிய தூரத்தில் அமைந்திருக்கிறது. ஸ்ரீ மடத்தின் கோபுரத்தில் ஸ்ரீ ஆதி சங்கராசார்யாள் மற்றும் அவருடைய நான்கு சிஷ்யர்களின் திருஉருவும் கடற்கறை நோக்கி அமைந்திருப்பதை நாம் காணலாம்.
ஸ்ரீ சங்கர மடத்தின் மூல மூர்த்தி மூன்று அடுக்கு கோபுரத்தில் அமைந்திருக்கிறது. கோபுரத்தின் அடித்தளத்தில் கடலை நோக்கி கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீ தட்க்ஷிணாமூர்த்தியை நாம் காணலாம். பக்த ராம்தாஸ் போன்று பல பக்தர்களின் சிற்ப ஓவியங்கள் கோபுரத்தின் முதல் தளத்தின் சுவற்றில் நாம் காணலாம். ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் பாதுகை மந்திரும் கோபுரத்தில் உள்ளது. மந்திரில் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ ஆதி சங்கராசார்யாளின் வாழ்க்கை வரலாறு வண்ணமயமான சிற்ப வேலைபாட்டுடன் கோபுரத்தில் அமைந்திருக்கிறது.
மற்றும் ஒரு மண்டபத்தில் பசு வாயில் கயிறுடன் ஆலயமணியை அடித்து கொண்டிருப்பது போல் அமைந்துள்ளது. இதை ஆராய்ச்சி மணி மண்டபம் என்பர். இதை தவிர 12 ஜோதிர் லிங்கங்களும், கணபதி, ஸுப்ரமணிய ஸ்வாமிகள் மற்றும் சரஸ்வதி தேவியின் திருஉருவ சிலையும் ஸ்ரீமடத்தில் உள்ளது.
ஸ்ரீமடத்தில் அமைந்திருக்கும் பிரசங்க மண்டபத்தில் பல தார்மீக காரியங்கள் நடைபெற்று வருகின்றன. 10 அறைகள் (இரண்டு குளிர்சாதன அறை உட்பட) கொண்ட யாத்ரி நிவாஸும் இங்கு உள்ளது. பேருந்து மற்றும் இரயில் நிலயங்களிலிருந்து சுமார் 2 கிமீலும் திருகோயிலிருந்து இரண்டே நிமிடத்தில் நடைபாதையாக யாத்ரி நிவாஸை நாம் அடையலாம். யாத்ரீகளுக்கு தினசரி அன்னதானம் நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, ராம்நாடு, திருபுல்லானி மற்றும் உத்தர கோச மங்கை நவ பாஷானம் முதலியன போன்ற புனித இடங்களை பற்றிய விவரங்கள் அறிய ஸ்ரீ ராமேஸ்வரம் ஸ்ரீ மடத்தின் மேலாளரை தொடர்பு கொள்ளலாம். (04573 221661)
Araychi Mani Mandapam |
Guest House |
Office Complex |
Yatri Nivas |